Loading...
 

முன்னோடி கிளப்புகள்

 

 

முன்னோடி கிளப்புகள் என்பது ஏதேனும் பொது கிளப்பிற்கு வழங்கப்படும் கௌரவ விருது ஆகும், இது Agora கல்வி மாதிரியின் அனைத்து பகுதிகளிலும் விதிவிலக்காக சிறப்பாக செயல்படுகிறது, மேலும் கல்வி மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அனைத்தையும் நெருக்கமாக பின்பற்றுகிறது. சிறப்பாக இயங்கும் கிளப் என்று மற்ற கிளப்புகள் உதாரணமாக, முன்னோடியாக அல்லது மாடலாக பின்பற்றக்கூடிய கிளப் இது.

Agora Speakers International ஆர்வமுள்ள நபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஊடக தொடர்புகளுக்கு முன்னோடி கிளப்புகளை வெளிப்படையாக விளம்பரப்படுத்தும்.

பூர்த்தி செய்ய வேண்டிய விஷயங்கள்

முன்னோடி கிளப் என்கிற விருதை பெறுவதற்கு, பொது கிளப் பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

உறுப்பினருரிமை மற்றும் நிறுவன ரீதியாக பூர்த்தி செய்ய வேண்டியவை

  • குறைந்தது 6 மாதங்களாவது தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்
  • பெரிய ஊசலாட்டங்கள் ஏதும் இல்லாமல், ஒப்பீட்டளவில் நிலையான உறுப்பினருரிமை அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும்
  • கிளப் அதிகாரி பாத்திரங்களின் முழு தொகுப்பையும் கொண்டிருக்க வேண்டும்
  • கூடுதலாக வரையறுக்கப்பட்ட தனிப்பயன் அதிகாரிகள் இருக்கக் கூடாது.
  • சொற்பொழிவு உள்ளடக்க வரையறைகள் எதுவும் இருக்கக் கூடாது (பொதுவான, Agora அளவிலானதைத் தவிர)

கல்வி ரீதியாக கடைபிடிக்க வேண்டியவை

  • அந்தக் கிளப்பிற்கு ஆண்டு முழுவதுக்குமான திட்டமுறையும் , அந்தக் கிளப்பின் தலைவரால் உருவாக்கப்பட்ட இலக்குகளும் இருக்க வேண்டும்.
  • அந்தக் கிளப்பிற்கு VPE (துணை தலைவர், கல்வி) மூலம் உருவாக்கப்பட்ட ஆண்டு முழுவதுக்குமான கல்வித் திட்டம் கல்வித் திட்டம்.
  • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் உள்ள பரிந்துரைகளை கிளப் பின்பற்ற வேண்டும்.
  • சந்திப்பில் வகிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் அதன் பாத்திரங்களின் வழிகாட்டுதல்களின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

சந்திப்பு தொடர்பாக கடைபிடிக்க வேண்டியவை

  • குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒரு முறை (மாதத்திற்கு இரண்டு முறை, ஒவ்வொரு மாதமும் நாட்டின் வழக்கமான விடுமுறை மாதங்களைத் தவிர) நேரடியாக சந்திக்க வேண்டும்.
  • கடந்த 6 மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்தது 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதே உறுப்பினர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும், விருந்தினர்களும் பார்வையாளர்களும் அதை எண்ணிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.
  • ஒரு சந்திப்பில் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டுமே இருந்தால், அது Agora கல்வி ரீதியான வரிசை அமைப்பின் செயல்திட்டமாக இருக்க வேண்டும். ஒரு சந்திப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகள் இருந்தால், அதிகபட்சம் அந்த சொற்பொழிவுகளில் ஒன்று Agora செயல்திட்டங்களில் இல்லாததாக இருக்க வேண்டும்.
  • விருந்தினர்கள் முறையாக வரவேற்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் வரவேற்பு பேக் பெற்றிருக்க வேண்டும்.

தகவல்தொடர்புகள் தொடர்பாக கடைபிடிக்க வேண்டியவை

 

 

முன்னோடி அந்தஸ்த்தைப் பெறுவது

முன்னோடி கிளப் என்ற அந்தஸ்து பின்வருமாறு வழங்கப்படுகிறது:

  • கிளப்பின் கல்வி துறையுடைய தலைவர் அல்லது துணைத் தலைவர் ஆன்லைன் கிளப் மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பு அனுப்பலாம் அல்லது info at agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பலாம்.
  • பின்பு அந்தக் கோரிக்கை ஆராயப்பட்டு, அந்தக் கிளப்பின் செயல்பாடுகளின் அடிப்படையில் அதன் தகுதி சரிபார்க்கப்படும்.
  • கிளப் தொடர்பான விஷயங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை சரிபார்க்க நாங்கள் ஒன்று அல்லது இரண்டு சந்திப்புகளில் கலந்து கொள்ளலாம்.
  • எல்லாம் சரியாக இருந்தால், அதிகாரப்பூர்வமாக முன்னோடி அந்தஸ்து வழங்கப்படும். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து நாங்கள் வழிகாட்டுதலை வழங்குவோம், அவற்றை சரிசெய்ததும் கிளப் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
முன்னோடி என்கிற அந்தஸ்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும், அதன் பிறகு அதனை வெளிப்படையாக புதுப்பிக்க வேண்டும்.

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:27 CET by agora.